சக்தி-சூன்யம்-சிவம்

Nisshanth K
Jun 19, 2021

--

Different depictions us Ardhanareeshwara

அவளது விளையாட்டு தொடுகை,
தடையற்ற உறக்கத்திலிருந்து அவனை எழுப்பியதும்,
திகைத்து, உருத்திரனாக கற்சித்தான்;

ஓயாத ஆற்றல் அலையை அவளுக்கு கொடையளித்து,
நித்திய நுண் ஆடலை தொடர்ந்திட,
மீள மீள நிகழும் காலச் சுழற்சியில் பயணித்து,

தன்னுடைய பன்மை தன்மைகளால் கட்டுண்டவளாய்;
தன் தோற்றுவாயை மறந்தவளாய்,
கட்டற்ற அறியாமையில் தன்னையே இழக்கிறாள்.

வலியால்,
வேதனை கொண்டு அழுகிறாள்,
மெலிதாக, இதோ!

காலபைரவனாக அங்கே மின்னி,
காலத்தால் அவளின் கட்டுகளை உடைத்தெறிந்து,
பின்னர் மறைகிறான்.

இருளாளனில் விழிப்பு கொள்கிறாள்,
தனது யோக-மாயை மூலமாக
அவளுடைய சுத்த ஆதி ஒளிக்கே.

அவனை மீண்டும் கண்கான முடியாமல்,
தேடி அலைகிறாள்,
தனது மனத்தின் ஒவ்வொரு மூளை முடுக்குகளிலும்.

முயற்சிகளால் சோர்வுற்று,
நிலையில் அமைகிறாள்.
அங்கே மீண்டும் சூன்யமாய் அவனை கண்டுகொள்கிறாள்

முடிவிலா குழப்பமுடைய சுலியம்,
அதோர் முடிவை ,
அவளது முடிவின்மைக்கு அளிக்கிறது.

இன்மைமேல் கனன்று…..
மருட்கை கொண்டவளாய்- இது என்னவென்று
அல்ல, இதுவாவென்று?

ஆயினும் இப்போது ஆனந்த களிப்புடன் ஒத்திசைந்து,
தன் செருக்கும் மனதை உணர்ந்தவளாய்,
இடுங்க முயல்வது

என்னவோ

Left: The inspiration, Right: The glance of Kalabhairava

Translated and captured in Tamil by Paramaguru

--

--

Nisshanth K
Nisshanth K

Written by Nisshanth K

Human Being-Writer- Poet- Philosopher- Teacher-

No responses yet