துர்க்கை

Nisshanth K
Jun 20, 2021

--

எண்ணற்ற நுண் அலைகள் எல்லையற்ற கடல் மடியில்
முன்னும் பின்னுமாக ஊசலாடி
தங்களை சுருள் முடுச்சுகளில் கறக்கின்றன

அவளுடைய தோற்றகால ஆடக கருவறையில்
அவர்கள் பெருமிதமாய் வெடித்து
மின்மயமாகி மீண்டும் பதங்கமாக
பரந்த பெருவெடிப்பின் உள்ளே

எழுந்து ஆடுகிறாள் மத்தியில்
தழலாக!
ஆட்கொள்ளும் மற்றும் படைக்கும் அது,
இருளை அகற்றி
நாகரீகத்தின் விடியலை ஈன்றது

உயிரை வஸ்து-ஆற்றலில் உட்செலுத்தும்
மற்றும் ஒளிமயமான மனதை தூண்டும்
உயிர்-ஆற்றலின் குழவி போன்ற விளையாட்டை இணக்கமாக்க
உன்னில் தஞ்சம்,
தழைக்கும் தலையுடைய மகிஷனை மாய்ப்பது,
துன்புறும் பொல்லா மனமானது முடிவில்லாமல் கலைப்படைவது
யாருக்கு எதிராக,
நீ பிரகாசிக்கும் பொன் சிம்மத்தை கட்டவிழ்த்து
நக்கி சுத்தம் செய்க மாசடைந்த உள ஆடியை
அந்த போக்கிரி நீர்க்கொடுக்குடைய உயிரணுக் கருவின்
சிவப்பு ரைபோசோமிகளின் எச்சங்களிலிருந்தும் கூட

உன்னத பொன் ஒளியை செலுத்தும்
அதனிடமிருந்து பன்மடங்குகளாக வெளிப்பட்ட நீயே
அநேகமாய் மனிதனின் நம்பிக்கையாகலாம்
போலி
மற்றும்
மகத்துவம்
இடையே உள்ள வேறுபாட்டை
அவதானிக்க.

Greek Hydra

Translated and rendered in Tamil by Paramaguru to whom I am very grateful.

--

--

Nisshanth K
Nisshanth K

Written by Nisshanth K

Human Being-Writer- Poet- Philosopher- Teacher-

No responses yet