புருஷன்

Nisshanth K
2 min readJun 19, 2021

--

புருஷன்

போக்கு காட்டும் புதிரானது,
என் மனம் புரிந்துகொள்ள தவிக்கும் மெய்யானது,
முற்பட்ட ரிஷிகளின் உன்னத தியாகமாய் பதிவிடப்பட்டது,
அசைக்கமுடியா அசைவுடைய கிரேக்கர்களானதும்,
க்ஷரமானதும் அக்ஷரமானதும்,
பிழையாக புரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவின் ராஜ்யமானதும்,
சூபிக்களால் தாவாக் என சுவைக்கப்பட்டதும்,
நிர்வாணமாய் புத்தரால் உணரப்பட்டது.

நீ யார்? அல்ல, யாது?

நீ, ஆயிரம் விழிமலர்ந்த இந்திரனோ?
-அவன் உக்கிரமான விசித்திரங்களாக பார்ப்பது
எனது அசட்டையான இந்திரியங்ள் பிறப்பிப்பதையே

அல்ல, பலநூறாயிரம்-கண்ணான மர்துக்
-அவன் படைப்பின் ஒழுங்கை நெய்கிறான்
நிழல்களின் ஒழுங்கின்மையிலிருந்து

ஆற்றும் ஹோர-சின் மதி விழியா அல்ல
அழிக்கவல்ல ரா-வின் பரிதி கண்களா?

சிவனின் மூன்றாவது விழியா?
இடையறாத காமத்தின் வேட்கையை பொசுக்கும் அதஇல்லையேல் காளியின் தாமரை கண்னோ?
அதுவானது பரவசத்தில் பூக்கும்
அகோரனின் சவத்தின்மேல் வெறிநடனமிடும் பொழுதிலா?

Left: Eyes of Horus and Ra, Centre: Integration of Horus, Right:Indra
Left: Kali, Right: Marduk

அறிபவனான நீ, ஆத்ம ஞானத்தால் அறிந்து
ரசிப்பவராய் பார்ப்பது
முரண்பாடுகளின் முரண்பாட்டை

சிலசமயங்களில் இதயத்தில் ஒலிக்கிறது,
ஆதியின் மந்திர முணுமுணுப்பாக,
சாக்ரட்டீசின் விளையாட்டுத்தனமாக உள்நுழையும் துர்தேவதை
பிரித்தறியும் மனதை குழப்பி
வாக் என தன்னிச்சையாக வெளிப்படுத்தி,
லோகோஸ் ஆக பொருளை தெரிவித்து
க்றோனோசின் கொட்டத்தை அடங்குகிறது.

சொல்லாகாததை என்னவென்று சொல்ல…..
விவரிக்க முடியாததை எவ்வாறு விவரிக்க ……
மேலெழுவதை மறைக்கா வண்ணம்.

திறவுகோல் அநேகமாய் உள்ளது
அமைதியில்
உடலான பரு உணர்கிறது
நானே அது
உடன் அனுபவிக்கும் உண்மையாய்
தத் துவம் அசி

A dear friend , Paramaguru was kind enough to render “Purusha” in Tamil since I have limited semantic proficiency with the language. But I do understand the intuitions that underlie it. May Purusha’s paradox continue to amuse us beyond the word……

Left :Buddha’s enlightenment, Centre: Shiva, Right: Sufi’s in ecstasy

--

--

Nisshanth K
Nisshanth K

Written by Nisshanth K

Human Being-Writer- Poet- Philosopher- Teacher-

No responses yet